மகாநதி - பாவங்களை நீரினில் கரைத்தால் கரையுமா?
ஒரு திரைப்படத்தால் என்ன செய்ய முடியும்? உங்களின் வாழ்க்கைக்கான பிரதிபலிப்பாக மாற முடியும்.அதிலும் கமலஹாசன் போன்ற ஒரு கலைச்சிற்பி இருந்தால், இன்னும் கூடுதல் கவனம் பெறும். இன்று பலர் 'குணா' வை கொண்டாடிக் கொண்டு இருக்கும் நேரத்தில் அனைவரும் கொண்டாட வேண்டிய படமாக இல்லாமல் ஆழ்ந்து யோசிக்க வைக்கும் படமாக நிற்கிறது பெரிதும் பேசப்படாத இந்த மகாநதி. ஒரு சாதாரண மனிதனின் ஆசை, பேராசை, ஈடு கட்ட இயலாத இழப்பு, துரோகம், நட்பு, காதல் என பல பரிமாணங்கள் ஒருங்கே கொண்ட திரைப்படம் இது. சிறைச்சாலைக்கான கலைவடிவமைப்பு தொடங்கி, யாரும் திரைப்படத்தில் காண்பிக்க மறுத்த கொல்கத்தாவின் சோனா காச்சி வரை படம் நெடுகிலும் அசரவைத்திருப்பார் கமல். இந்த சிறைச்சாலையை நன்றாக கவனித்தால் இதன் சாரம் விருமாண்டியில் இருப்பது நன்றாக தெரியும். கமலுக்கே உரிய பகுத்தறிவு சிந்தனை, கடவுள் மறுப்பு வசனங்கள், கம்யூனிச சித்தாந்தம், மொழிக்கொள்கை எனப் பல இடங்கள் இருந்தாலும் , சின்னச் சின்ன நடிகர்களின் பாத்திரத் தேர்வும் நடிப்பும் மிகுதியாக கவனம் பெறுகின்றது. உதாரணமாக சக சிறைவாசியான ஐயர் ஒருவர் நான் தினமும் கடவுள் ...