Posts

Showing posts from May, 2023

உதிரிப்பூக்கள் - மானுடவியலின் நிறங்கள்

Image
 வெளிநாட்டுப் படங்களைப் பார்த்து நெகிழ்ந்து கொண்டு இருக்கையில், நம்ம ஊரு படங்கள் இன்றும் காலம் தாண்டி நிற்கிறது. எளிய மக்களின் வாழ்க்கை கதையை பிரதிபலிக்கும் சினிமா என்று மலையாள திரைப்படங்கள் பெயர் வாங்கி வரும் நிலையில்,அதுக்கு விதை நாம போட்டது என உலகநாயகனின் வசனத்திற்கு பொருத்தமானவை தமிழ் திரைப்படங்கள். அந்த வரிசையில் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் 1979-ம் ஆண்டு திரு.மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த "உதிரிப்பூக்கள்" திரைப்படம். இந்த திரைப்படம் புதுமைப்பித்தன் எழுதிய "சிற்றன்னை" யைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்த படத்தின் கதாநாயகன் (வடிவேலு) நம்ம 7G - ரெயின்போ காலனி கதிரோட அப்பா  விஜயன் சார் தான். ரமணா படத்துல வர்ற மாதிரி ஜீம் பண்ணு ...ஜீம் பண்ணு ன்னு பாத்தீங்கன்னா தான் அட! இவர்தான் அவருன்னு தெரியும். கதாநாயகி (லட்சுமியாக) அஸ்வினி வாழ்ந்திருப்பார். அவரின் தங்கை (செண்பகம்) என்ற பாத்திரத்தில் மதுமாலினியும் , இந்த  இருவரின் அப்பாவாக சாருஹாசனும் நடித்திருப்பார்கள். நமக்கு தெரிஞ்ச முகம்ன்னு பார்த்தால் இந்த படத்தில் இரண்டு அல்லது மூன்று தான். அதுல இவரும் ஒன்னு. சமீபத்தில்...

CAPERNAUM - A QUESTION TO THE WORLD FROM A 12 - YEAR OLD BOY

Image
  CAPERNAUM   இந்த இடம் வடக்கு இஸ்ரேல் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமம் . இயேசு தனது சீடர்களுடன் இங்கு இருந்ததாக க்  கூறப்படுகிறது.  இந்த இடத்தில்  இருக்கும் மக்களின் விளிம்பு நிலையை உலகத்தில் உள்ள பல சபை - கூட்டங்களில்  பேசி கொண்டு தான் உள்ளனர். ஆனாலும் பெரிய மாற்றங்கள் நிகழாமல், தன் சொந்த நாட்டிலேயே குடியுரிமை ச் சான்று   இல்லாமலும், பக்கத்து நாடுகளில் அகதியாகவும் வாழ்கின்றனர். உண்ண உணவு, தாகம் தீர்க்கும் நீர் , இருப்பதற்கு உறைவிடம். இவை உங்களிடம் இருந்தால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஆம். இவை அடிப்படைத் தேவை தானே என்றாலும்  இது இந்த Capernaum மக்களுக்கு ஓர் அலாதி ஆடம்பரம். Capernaum - இது 2018 இல் வெளி வந்த திரைப்படம் ஆகும். இது ஓர் lebanese திரைப்படம்.  இந்த திரைப்படத்தை Nadine labaki என்பவர் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் Cannes festival போன்ற திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளைக் குவித்துள்ளது. சரி. கதைக்கு வருவோம். அப்படி என்ன இந்த படத்துல இருக்கு? இதை ஏன் நாம பாக்கணும்?  இப்படி பல கேள்விகள் இருக்கலாம்...