CAPERNAUM - A QUESTION TO THE WORLD FROM A 12 - YEAR OLD BOY

 CAPERNAUM 

இந்த இடம் வடக்கு இஸ்ரேல் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமம் . இயேசு தனது சீடர்களுடன் இங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த இடத்தில்  இருக்கும் மக்களின் விளிம்பு நிலையை உலகத்தில் உள்ள பல சபை -கூட்டங்களில் பேசி கொண்டு தான் உள்ளனர். ஆனாலும் பெரிய மாற்றங்கள் நிகழாமல், தன் சொந்த நாட்டிலேயே குடியுரிமைச் சான்று  இல்லாமலும், பக்கத்து நாடுகளில் அகதியாகவும் வாழ்கின்றனர்.


உண்ண உணவு, தாகம் தீர்க்கும் நீர் , இருப்பதற்கு உறைவிடம்.

இவை உங்களிடம் இருந்தால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி.

ஆம். இவை அடிப்படைத் தேவை தானே என்றாலும் 
இது இந்த Capernaum மக்களுக்கு ஓர் அலாதி ஆடம்பரம்.

Capernaum - இது 2018 இல் வெளி வந்த திரைப்படம் ஆகும். இது ஓர் lebanese திரைப்படம்.  இந்த திரைப்படத்தை Nadine labaki என்பவர் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் Cannes festival போன்ற திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளைக் குவித்துள்ளது.


சரி. கதைக்கு வருவோம். அப்படி என்ன இந்த படத்துல இருக்கு? இதை ஏன் நாம பாக்கணும்?  இப்படி பல கேள்விகள் இருக்கலாம்.

அதுக்கு முன்னாடி நெறைய பேர் சலிப்புடன் வாழ்கிற வாழ்க்கைக்கு ஒரு பாடமாய் இருக்கும் இந்த படம். 

எல்லாரும் கஷ்டபட்டு தான் ஆகணும்‌. அது ஒரு நியதி. ஆனால் இந்த கதையில் வரும் சிறுவன் சையீதுக்கு முன்னாடி நம்மளோட , என்ன வாழ்க்கை டா இதுங்குற எண்ணம் தோற்று போகும்.
உங்க தெருவோரத்தில் ஒரு நாய் பல குட்டிகளை ஈன்றுகிறது. நீங்க அதுல ஒரு குட்டியை அதோட கண்ணு முன்னாடியே தூக்கப் பார்த்தால் என்ன ஆகும்?

கண்டிப்பா அதோட கோபம் பெரியதாக இருக்கும் தானே. ஆனால் இந்த கதையில் அப்படியே தலைகீழ். 

ஒரு வீட்டில் எக்கச்ச குழந்தைகளோடு ஒரு குடும்பம். யாரு முதல் யாரு கடைசின்னு தெரியாத அளவிற்கு இருக்கும்‌. பொறுப்பற்ற அப்பா,போதைக்கு அடிமையாகி அடுத்தவரை அடிமையாக்க போதைப்பொருள் தயாரிக்கும் தாய், நடுவில் நம்ம கதாநாயகன் சையீத். இவனுக்கு முன் சிறையில் இருக்கும் அண்ணனும், ஒரு அக்காவும்.

இவனுக்கு பின் அளவாக நான்கைந்து குட்டீஸும்....


இப்படி பட்ட குடும்ப கட்டமைப்பில் சையீதின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்.
நம்ம வாழும் வாழ்க்கை எவ்வளவோ பரவாயில்லைன்னு தோணும்.


அப்பா ஊர் சுற்றுகிறார்.இரவில் குடித்துவிட்டு வீடு திரும்பவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
அண்ணன் சிறையில் இருக்கிறார்.

சையீத்தின் தாய் போதைப்பொருள் தயார்செய்து விற்பனை செய்கிறார்.  

சையீத் வெறும் பன்னிரண்டு வயதே இருந்தாலும் தனது அக்காவின் மீது பாசம் கொண்டவன். அவளுக்காக ஒரு மளிகைக் கடையில் வேலை பார்ப்பான், சர்பத் விற்பான்.
அவளுடைய சந்தோஷத்திற்காக உழைப்பான்.


சையீத் வேலை பார்க்கும் மளிகைக் கடையின் முதலாளி ஆசாத் , சையிதின் அக்காவை திருமணம் செய்யும் முனைப்பிலேயே இருப்பான். சிறு வயதிலேயே அவளை அவனுக்கு திருமணம் செய்து வைக்கும் திட்டத்தையும் வீட்டில் அறிகிறான்.

ஒருநாள் சையீத் தனது அக்கா பதின்ம வயது அடைவதை அறிந்து அதை மறைக்க முயல்கிறான். 

இருவரும் வீட்டிலிருந்து தப்பிக்க வழியை உருவாக்குகிறான். மளிகைக் கடையில் தேவையான பொருட்களை திருடிவிட்டு வீட்டிற்குச் செல்கிறான்.



ஆனால் வீட்டிற்குத் தெரிந்து அவளை ஆசாத்திற்கு பலியாகக் கொடுக்கிறது குடும்பம்.

சையீத் போராடுகிறான். தனது தந்தை அவளை ஏற்றிச் செல்லும் வண்டியின் பின் ஓடுகிறான்.

 எதுவும் பயனில்லை. அழுதபடியே அந்த திருடிய  பொருட்களோடு நின்று கொண்டிருந்த பேருந்தில் ஏறிச் செல்கிறான்.

ஒரு முதியவரின் உதவியால் அந்த பேருந்தில் பயணச்சீட்டு கிடைக்கிறது.

கையில் காசு இல்லாததால் மேலும் போகும் வழியிலேயே இறக்கிவிடப்படுகிறான்.


அவன் தஞ்சம் புகுந்த இடம் எத்தியோப்பியா நாட்டில் இருந்த இந்த ஊரில் அகதியாக வாழும் ரயீஸ். அவளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.


இந்த குழந்தையை ரயீஸ் வேலைக்குச் சென்று வரும் வரை சையீத் பார்த்துக் கொண்டால் சையீத்திற்கு அன்று உணவு கிடைக்கும்.


ஒருநாள் ரயீஸை அந்த நாட்டு காவலர்கள் குடியுரிமை இல்லாதவர்கள் என்று சிறையில் அடைக்கின்றனர்.

அந்த குழந்தையுடன் சையீத் இரண்டு நாட்கள் ரயீஸுக்கு என்ன ஆனதென்று தெரியாமல் இருக்கிறான்.

பசி இருவருக்கும். 
குழந்தையின் அழுகை.
சையீதின் செய்வதறியாத நிலை.

கடைசியில் குழந்தையின் பசியைப் போக்க ஒரு கடைக்காரனிடம் அந்த குழந்தையை தத்துக் கேட்பவரிடம் கொடுப்பதாக சம்மதிக்கிறான்.


அவர்கள் வரும் வரை அந்த குழந்தையை கட்டிப்போட்டு விட்டு நகர்கிறான். இந்த குழந்தை சையீத்தை மீண்டும் அழைக்கும் இடத்தில் கல்லும் கூட கரையும்.


விற்க மனமில்லாது குழந்தையை அழைத்துக் கொண்டு அகதிகளின் முகாமிற்கு செல்கிறான்.

அங்கே பக்கத்து நாட்டிற்கு பலர் செல்வதை அறிகிறான் சையீத்.


பக்கத்து நாட்டிற்கு செல்ல தனது அடையாள அட்டை வேண்டும் என்பதால் மீண்டும் வீட்டிற்கு சென்று பார்க்கிறான்.

அவனுடைய அடையாளத்திற்கான சுவடே இல்லை.

மாறாக செய்தித்தாளில் அவளுடைய அக்கா இறந்த செய்தியைக் காண்கிறான்.‌ சையீதின் பெற்றோர் அவனை சமாதானப்படுத்துவதற்குள்  கடை முதலாளி ஆசாத்தை சையீத்தின் கத்தி பதம் பார்க்கிறது.

சையீத் சிறையில் அடைக்கப்படுகிறான். ரயீஸ் இருக்கும் அதே சிறை.‌ 

வழக்கு நீதிமன்றம் வருகிறது.  சையீத் தன்னை இவர்கள் பெற்றது தவறு என்கிறான். சிறு வயதில் திருமணம் செய்து வைத்து அவள் கர்பம் தரித்ததால் தனது அக்காவை இவர்களால் இழந்ததாக கூறுகிறான்.

பெற்றால் மட்டும் போதுமா என்ற கேள்வி நீதிபதி முன் வைக்கபடுகிறது.

தீர்ப்புக்கு முன் சையீதின் தாய் சையீதிடம் உன் அக்கா இறந்தது விதி. கவலைப்படாதே உனக்கு ஒரு தங்கை வரவுள்ளார் என சொல்லும் இடத்தில் நமக்கே கோபம் வெகுண்டு எழும்.


தீர்ப்பு கொடுக்கப்படுகிறது.

என்ன தீர்ப்பு கொடுக்கப்பட்டது?

ரயீஸுக்கும் அவளுடைய குழந்தைக்கும் என்ன ஆனது என்பதே படத்தின் முடிவு.


படத்தின் ஆரம்பக் காட்சியில் கான்கீரிட் காடுகளுக்குள் துப்பாக்கி போன்ற கட்டைகளை வைத்து சிறுவர்கள் விளையாடுவர்.வன்முறை தவறு என்பதைக் கூட சொல்லித் தர யாருமில்லை.

சையீதிற்கு படிக்க வேண்டும் என்ற ஆசையைக் கூட இந்த சமூகம் பாழ்படுத்தி இருக்கும்.

கடைசியில் வரும் ஒரு close -up ஷாட் சையீதின் விடுதலை.

சையீதின் வாழ்க்கையை விட நம் அனைவரின் வாழ்க்கையும் ஆசிர்வதிக்கப்பட்டது. துருக்கி கடலில் கரை ஒதுங்கிய அகதியான சிறு குழந்தையின் சடலத்தை மையமாக வைத்தே Nadine labaki இயக்கியும் நடித்தும் உள்ளார்.

மனிதம் கொஞ்சம் மீதம் வைக்கச் சொல்கிறார்.



film : CAPERNAUM (2018)
director : NADINE LABAKKI
review: PRANESH .M

Comments

Popular posts from this blog

உதிரிப்பூக்கள் - மானுடவியலின் நிறங்கள்