Posts

உங்களின் ஊர் உங்களை அன்புடன் வரவேற்க காத்திருக்கிறது! ‌- பேரன்புடன் மெய்யழகன்!

Image
நீண்ட இடைவெளி! '96 - இன்றும் பலருக்கு நெருக்கமான படைப்பு. ராமச்சந்திரனும் ஜானகி தேவியும் தேர்ந்த பாத்திரங்களாக இல்லாமல் நமது வாழ்வோடு ஒன்றி இருப்பார்கள். "நரை வந்த பிறகே, புரியுது உலகை" என பிரதீப் குமாரின் குரல் இன்றும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி பல பரிமாணங்களில் வாழ்வியலைப் புரட்டிப் போட்ட படைப்பாளரைக் காணவில்லை. மீண்டும் வருகிறார் பிரேம்குமார். சென்ற முறை - காதல். இந்த முறை - அன்பு. அதுவும் பேரன்பு. அழகிய தமிழ்ப்பெயர் இதனுடன் சேர்ந்து கொள்கிறது.  மெய்யழகன்!! கதை மாந்தர்களாக கார்த்தியும், அரவிந்த் சுவாமியும். வித்தியாசமான இந்த இணைப்பு கவனம் பெறுகிறது. ஆரம்பம் முதலே தமிழுணர்வினை நெடுகிலும் நிறைத்து வைத்திருக்கிறார் பிரேம். கிளர்வோட்டம் வருகின்றது, புரட்டாசியில் வெளியீடு என்கின்ற அழைப்பிதழுடன். இதுவே ஆகச் சிறந்த பேரன்பும், பெருமிதமும். சொந்த ஊரைப் பிரிந்து சென்ற ஒருவன், மீண்டும் தனது சொந்த ஊருக்கு ஓர் கல்யாணத்திற்காக விருப்பமில்லாமல் அரை மனதுடன் வருகிறான். வந்த இடத்தில் அவனுடன் யார் என்றே அடையாளம் தெரியாத ஒருவன் உபசரிப்பில் "அத்தான்" என அன்பு மழை பொழ...

மகாநதி - பாவங்களை நீரினில் கரைத்தால் கரையுமா?

Image
       ஒரு திரைப்படத்தால் என்ன செய்ய முடியும்? உங்களின் வாழ்க்கைக்கான பிரதிபலிப்பாக மாற முடியும்.அதிலும் கமலஹாசன் போன்ற ஒரு  கலைச்சிற்பி இருந்தால், இன்னும் கூடுதல் கவனம் பெறும். இன்று பலர் 'குணா' வை கொண்டாடிக் கொண்டு இருக்கும் நேரத்தில் அனைவரும் கொண்டாட வேண்டிய படமாக இல்லாமல் ஆழ்ந்து யோசிக்க வைக்கும் படமாக நிற்கிறது பெரிதும் பேசப்படாத இந்த மகாநதி. ஒரு சாதாரண மனிதனின் ஆசை, பேராசை, ஈடு கட்ட இயலாத இழப்பு, துரோகம், நட்பு, காதல் என பல பரிமாணங்கள் ஒருங்கே கொண்ட திரைப்படம் இது. சிறைச்சாலைக்கான கலைவடிவமைப்பு தொடங்கி, யாரும் திரைப்படத்தில் காண்பிக்க மறுத்த கொல்கத்தாவின் சோனா காச்சி வரை படம் நெடுகிலும் அசரவைத்திருப்பார் கமல். இந்த சிறைச்சாலையை நன்றாக கவனித்தால் இதன் சாரம் விருமாண்டியில் இருப்பது நன்றாக தெரியும். கமலுக்கே உரிய பகுத்தறிவு சிந்தனை, கடவுள் மறுப்பு வசனங்கள், கம்யூனிச சித்தாந்தம், மொழிக்கொள்கை எனப் பல இடங்கள் இருந்தாலும் , சின்னச் சின்ன நடிகர்களின் பாத்திரத் தேர்வும் நடிப்பும் மிகுதியாக கவனம் பெறுகின்றது. உதாரணமாக சக சிறைவாசியான ஐயர் ஒருவர் நான் தினமும் கடவுள் ...

உதிரிப்பூக்கள் - மானுடவியலின் நிறங்கள்

Image
 வெளிநாட்டுப் படங்களைப் பார்த்து நெகிழ்ந்து கொண்டு இருக்கையில், நம்ம ஊரு படங்கள் இன்றும் காலம் தாண்டி நிற்கிறது. எளிய மக்களின் வாழ்க்கை கதையை பிரதிபலிக்கும் சினிமா என்று மலையாள திரைப்படங்கள் பெயர் வாங்கி வரும் நிலையில்,அதுக்கு விதை நாம போட்டது என உலகநாயகனின் வசனத்திற்கு பொருத்தமானவை தமிழ் திரைப்படங்கள். அந்த வரிசையில் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் 1979-ம் ஆண்டு திரு.மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த "உதிரிப்பூக்கள்" திரைப்படம். இந்த திரைப்படம் புதுமைப்பித்தன் எழுதிய "சிற்றன்னை" யைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்த படத்தின் கதாநாயகன் (வடிவேலு) நம்ம 7G - ரெயின்போ காலனி கதிரோட அப்பா  விஜயன் சார் தான். ரமணா படத்துல வர்ற மாதிரி ஜீம் பண்ணு ...ஜீம் பண்ணு ன்னு பாத்தீங்கன்னா தான் அட! இவர்தான் அவருன்னு தெரியும். கதாநாயகி (லட்சுமியாக) அஸ்வினி வாழ்ந்திருப்பார். அவரின் தங்கை (செண்பகம்) என்ற பாத்திரத்தில் மதுமாலினியும் , இந்த  இருவரின் அப்பாவாக சாருஹாசனும் நடித்திருப்பார்கள். நமக்கு தெரிஞ்ச முகம்ன்னு பார்த்தால் இந்த படத்தில் இரண்டு அல்லது மூன்று தான். அதுல இவரும் ஒன்னு. சமீபத்தில்...

CAPERNAUM - A QUESTION TO THE WORLD FROM A 12 - YEAR OLD BOY

Image
  CAPERNAUM   இந்த இடம் வடக்கு இஸ்ரேல் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமம் . இயேசு தனது சீடர்களுடன் இங்கு இருந்ததாக க்  கூறப்படுகிறது.  இந்த இடத்தில்  இருக்கும் மக்களின் விளிம்பு நிலையை உலகத்தில் உள்ள பல சபை - கூட்டங்களில்  பேசி கொண்டு தான் உள்ளனர். ஆனாலும் பெரிய மாற்றங்கள் நிகழாமல், தன் சொந்த நாட்டிலேயே குடியுரிமை ச் சான்று   இல்லாமலும், பக்கத்து நாடுகளில் அகதியாகவும் வாழ்கின்றனர். உண்ண உணவு, தாகம் தீர்க்கும் நீர் , இருப்பதற்கு உறைவிடம். இவை உங்களிடம் இருந்தால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஆம். இவை அடிப்படைத் தேவை தானே என்றாலும்  இது இந்த Capernaum மக்களுக்கு ஓர் அலாதி ஆடம்பரம். Capernaum - இது 2018 இல் வெளி வந்த திரைப்படம் ஆகும். இது ஓர் lebanese திரைப்படம்.  இந்த திரைப்படத்தை Nadine labaki என்பவர் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் Cannes festival போன்ற திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளைக் குவித்துள்ளது. சரி. கதைக்கு வருவோம். அப்படி என்ன இந்த படத்துல இருக்கு? இதை ஏன் நாம பாக்கணும்?  இப்படி பல கேள்விகள் இருக்கலாம்...