மகாநதி - பாவங்களை நீரினில் கரைத்தால் கரையுமா?

     ஒரு திரைப்படத்தால் என்ன செய்ய முடியும்? உங்களின் வாழ்க்கைக்கான பிரதிபலிப்பாக மாற முடியும்.அதிலும் கமலஹாசன் போன்ற ஒரு  கலைச்சிற்பி இருந்தால், இன்னும் கூடுதல் கவனம் பெறும்.


இன்று பலர் 'குணா' வை கொண்டாடிக் கொண்டு இருக்கும் நேரத்தில் அனைவரும் கொண்டாட வேண்டிய படமாக இல்லாமல் ஆழ்ந்து யோசிக்க வைக்கும் படமாக நிற்கிறது பெரிதும் பேசப்படாத இந்த மகாநதி.



ஒரு சாதாரண மனிதனின் ஆசை, பேராசை, ஈடு கட்ட இயலாத இழப்பு, துரோகம், நட்பு, காதல் என பல பரிமாணங்கள் ஒருங்கே கொண்ட திரைப்படம் இது.


சிறைச்சாலைக்கான கலைவடிவமைப்பு தொடங்கி, யாரும் திரைப்படத்தில் காண்பிக்க மறுத்த கொல்கத்தாவின் சோனா காச்சி வரை படம் நெடுகிலும் அசரவைத்திருப்பார் கமல்.


இந்த சிறைச்சாலையை நன்றாக கவனித்தால் இதன் சாரம் விருமாண்டியில் இருப்பது நன்றாக தெரியும்.


கமலுக்கே உரிய பகுத்தறிவு சிந்தனை, கடவுள் மறுப்பு வசனங்கள், கம்யூனிச சித்தாந்தம், மொழிக்கொள்கை எனப் பல இடங்கள் இருந்தாலும் , சின்னச் சின்ன நடிகர்களின் பாத்திரத் தேர்வும் நடிப்பும் மிகுதியாக கவனம் பெறுகின்றது.


உதாரணமாக சக சிறைவாசியான ஐயர் ஒருவர் நான் தினமும் கடவுள் மந்திரம் சொல்கிறேன். கடவுளை தினமும் வழிபடுபவனுக்கு துன்பம் வராது எனத் தானும் சிறையில் இருப்பதை மறந்து கமலிடம் சொல்லுவார்.

கமல் அதற்கு பதில் எதும் பேசாமல் இருப்பார். 

திருநாகோஸ்வர நீரில் ஆரம்பிக்கும் கதை, பல கண்ணீர் கடந்து கங்கை நீர் கண்டு மீண்டும் தனது சொந்த மண்ணின் நீர் தொடுகிறது. 



அப்போதே இந்த MLM, மற்றும் சதுரங்க வேட்டை பற்றி கமல் ஒரு விதை போட்டு சாதாரண மனிதனின் தேவைக்கு மீறிய ஆசை எங்கு கொண்டு போய் நிறுத்தும் என கண் முன்னே நிறுத்தியுள்ளார்.அதுவே கமலின் கதையும் திரைக்கதைக்குமான ராஜாங்கம்.

உலகநாயகனாகவே இருந்தாலும் நானே இசையின் நாயகன் என இளையராஜா உயிரை உலுக்கி இருப்பார். இன்றும் பொங்கலுக்கு இந்த படத்தில் வரும் "தைப்பொங்கலும் பொங்குது" பாடல் எங்கும் ஒலிக்கும்.


உடை வடிவமைப்பில் சரிகா கமலஹாசன் தனியாக மிளிர்வார். ஒளிப்பதிவு, ஒப்பனை என் அனைத்துத் துறையும

மகாநதியின் உயிரோட்டமாக "ஷோபனா" ஒரு அற்புதம்.

மகாநதியில் ஏகப்பட்ட புல்லரிப்புகள் உள்ளன.

சிறையில் நேர்மையான அதிகாரி கமலுக்கு பாரதியார் கவிதையைக் கொடுப்பது.

நேர்மையாக இருப்பவர்கள் கேட்காமல் இருப்பதால் தான் சாக்கடையில் நீர் பெருகுகிறது.

விலைமாதுவான பெண்ணுக்கு சக விலைமாதுக்கள் ஒன்றிணைந்து பணம் கொடுத்து விடுதலை கொடுப்பது.

கடைசியில் ஆங்கிலத்தில் புலம்பும் வில்லனிடம்
எனக்கு தமிழ்ல சொல்லு எனக் கூறும் நாயகன்.

இப்படி "இதான்டா சினிமா" என பாடம் எடுத்த கமலுக்கு உறுதுணையாக இருந்து படம் இயக்கியுள்ளார் சந்தானபாரதி.

உங்களிடம் இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக இருங்கள். பாவங்களை செய்து அதை கங்கையில் கரைப்பதாக எண்ணி கங்கையைக் கலங்க வைக்காதீர்கள் என மகாநதியின் புனிதமும் மனிதர்களின் குரூரமும் பேசிய திரைப்படம் இதுவே.


மனித மனங்களின் பேராசையும், அதிகாரத்தின் அடக்குமுறையும் எந்த நதியில் குளித்தால் தீரும்?



FILM : MAHANADHI 
YEAR : 1994
NOTABLE : BEST FILM AWARD FOR THE YEAR

YT LINK : https://youtu.be/xfqwLtEwp5U?si=j4U75F0k2zuypW4O

Comments

Post a Comment

Popular posts from this blog

உதிரிப்பூக்கள் - மானுடவியலின் நிறங்கள்